Never change your mobile Number.Changing Network.
மொபைல் போன் எண்ணை மாற்றாமல், சேவை அளிக்கும் நிறுவனத்தை
வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் புதிய
வசதியை, மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று துவக்கி வைத்தார்.
மொபைல் போன் வாடிக்கையாளர் எண்ணிக்கைக்கு தக்க வகையில், தொலைத்தொடர்பு
சேவை அளிக்கும் நிறுவனங்களின் வருகையும் கணிசமாக உயர்ந்து விட்டது. இதனால்,
தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி
நிலவுகிறது. வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும், புதிய
வாடிக்கையாளர்களை கவரும் விதத்திலும் அவ்வப்போது, புதுப்புது சேவைகளை,
சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அதிக
சேவை மற்றும் சலுகை வழங்கும் நிறுவனத்திற்கு தாவி விடுகின்றனர். அப்படி
தாவும் போது, மொபைல் போன் நம்பரை அடிக்கடி மாற்றும் நிலைக்கு
வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, மொபைல் போன்
வாடிக்கையாளர்கள் நம்பரை மாற்றாமல், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும்
நிறுவனத்தை மட்டும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்த மத்திய
அரசு திட்டமிட்டது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை
சிக்கல்கள் ஏற்பட்டன. இரண்டு ஆண்டு இழுபறிக்கு பின், இந்த புதிய வசதியை
அரியானாவில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் நேற்று துவக்கி
வைத்தார். இந்த வசதி விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Water Proof Mobile !
லண்டன்: தண்ணீரில் மூழ்கினாலும், இடிபாடுகளில் சிக்கினாலும் பாதிக்காத
மொபைல் போன் விற்பனைக்கு வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த, "ட்ரேட்ஸ்மேன்'
நிறுவனம், தண்ணீருக்குள் இருந்து பேசினாலும் பாதிக்காத மொபைல் போனை
அறிமுகப்படுத்தியுள்ளது. நீச்சல் குளத்தில் மூழ்கிக்கொண்டே இந்த போனில் பேச
முடியும்.
ஒரு வாகனத்தின் பின்புறம் கட்டப்பட்டு, 120 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த மொபைல் போன் இழுத்து செல்லப்பட்டது. அதன் பின், இரண்டு டன் கான்கிரீட் குப்பைகள் இந்த மொபைல் போன் மீது கொட்டப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனைகளுக்கு பிறகும் இந்த மொபைல் போன் பாதிக்கப்படவில்லை. தண்ணீராலும், விபத்துகளாலும் பாதிக்கப் படாத இந்த போனுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இந்நிறுவன அதிகாரி குறிப்பிடுகையில், "கடந்த இரண்டு நாட்களில், 50 ஆயி ரம் போன்கள் விற்று தீர்ந்து விட்டன. இந்த போனுக்காக ஏற்கனவே நான்காயிரம் பேர் முன்பதிவு செய்து காத்திருந்தனர்' என்றார்.

Mobile
MangaiMobiles.
_________________________
MobileFones
Are
Not
Good but
Anyware
Important.
_________________________
Subscribe to:
Posts (Atom)